லாட்டரி சீட்டுகள் விற்ற 8 பேர் கைது

லாட்டரி சீட்டுகள் விற்ற 8 பேர் கைது
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா? என போலீசார் கண்காணித்தனர். அதில் லாட்டரி சீட்டு விற்ற ஊத்தங்கரை வெங்கடேசன் (வயது 37), சிங்காரப்பேட்டை ராஜி (33), வடமலம்பட்டி ரமேஷ் (48), கிருஷ்ணகிரி பாரதியார் நகர் சீனிவாசன் (36), ஓசூர் ராயக்கோட்டை அட்கோ ராமசாமி (70), மகாதேவன் (47), தேன்கனிக்கோட்டை ஆசாத் தெரு அப்துல் சலீம் (55), ராயக்கோட்டை ரகமத் காலனி முருகன் (46) ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2,650 பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com