கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது
Published on

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை போலீசார் பெட்டமுகிலாளம் கோடியூர் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தபோது 400 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர் பெட்டமுகிலாளம் அருகே உள்ள கோட்டையூர் கொல்லை பகுதியை சேர்ந்த மல்லேசா (வயது 27) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com