பாப்பிரெட்டிப்பட்டியில்கட்டிட மேஸ்திரியை தாக்கியவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டியில்கட்டிட மேஸ்திரியை தாக்கியவர் கைது
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரை சேர்ந்தவர் ஜீவா (வயது 35). கட்டிட மேஸ்திரி. இவருக்கு ராணி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஜீவா குடும்பத்துடன் வீட்டில் இருந்தபோது பக்கத்து வீட்டுக்காரரான முருகன் மகன் வினோத் குமார் (31) என்பவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் தகாத வார்த்தையால் திட்டி வீட்டின் கதவை உடைத்தும் ஜீவாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து குடும்பத்தினர் மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து ஜீவா கொடுத்த புகாரின்பேரில் பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com