பொம்மிடி அருகேகஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

பொம்மிடி அருகேகஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது
Published on

பாப்பிரெட்டிப்பட்டி:

பொம்மிடி சுற்றுவட்டார பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேசுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ஒட்டுப்பள்ளம் முனியப்பன் கோவில் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு 3 பேர் வெள்ளைநிற பாலித்தீன் கவரில் எதையோ கட்டி கொண்டிருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓடினர். அதில் 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் பி.பள்ளிப்பட்டியை சேர்ந்த அரவிந்த் குமார் (எ) பண்ணு (வயது 21), சேட்டு (22) என்பதும், தப்பி ஓடியவர் ஜெயசூர்யா (எ) பாண்டு என்பதும் தெரியவந்தது. பின்னர் பையை சோதனை செய்ததில் சுமார் 1 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து போலீசார் அரவிந்த் குமார், சேட்டு ஆகியோரை கைது செய்ததோடு கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com