பெண்ணை தாக்கிய கணவர் கைது

பெண்ணை தாக்கிய கணவர் கைது
Published on

ஓசூர்:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள உள்ளுகுறுக்கையை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மனைவி ரோஜா (வயது 26). இவர்களுக்குள் குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. கடந்த 8-ந் தேதி ஓசூர் கிருஷ்ணப்பா நகரில் உள்ள உறவினர் வீட்டில் ரோஜா இருந்தபோது ராஜாவிற்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதில் காயம் அடைந்த ரோஜா இதுகுறித்து ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com