கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி, குட்கா, கஞ்சா விற்ற 4 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் லாட்டரி, குட்கா, கஞ்சா விற்ற 4 பேர் கைது
Published on

கெலமங்கலம் போலீசார் கணேசா காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு லாட்டரி சீட்டுகள் விற்ற கெலமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த செந்தில்குமார் (வயது 41) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

காவேரிப்பட்டணம் போலீசார் ரவி தியேட்டர் பின்புறம் ரோந்து சென்றனர். அங்கு நின்ற ஒருவரை சோதனை செய்தபோது அவர் 50 கிராம் கஞ்சா வைத்திருந்த அம்ஜத் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ராயக்கோட்டை போலீசார் போடம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு 50 கிராம் கஞ்சா வைத்திருந்த முருகன் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

பர்கூர் போலீசார் கொத்தலகுட்டை பிரிவு சாலையில் ரோந்து சென்றனர். அங்குள்ள கடை ஒன்றில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தத தெரியவந்தது. இதுதொடர்பாக திருப்பதி (37) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com