தூய்மை பணியாளர்கள் கைது: காவல்துறை தாயுள்ளத்தோடு அணுகியிருக்க வேண்டும் - செல்வப்பெருந்தகை

தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிப்பதாக செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நேற்று இரவு தூய்மைப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்புறப்படுத்தியிருப்பது வேதனையளிக்கிறது. நீதிமன்றம் கூறினாலும் கூட காவல்துறை தாயுள்ளத்தோடு அணுகியிருக்க வேண்டும்.

தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

கடைக்கோடி பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவுக் கரம் அளித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும், கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களையும், அவர்களுக்காக போராடிய ஜனநாயக சக்திகளையும் விடுவிக்க தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்கள் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டுகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com