போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி, போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
Published on

பழனி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி கே.வேலூரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 47). கூலித்தொழிலாளி. இவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தாள். அதையடுத்து சிறுமியின் பெற்றோர், பழனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் பேக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து லட்சுமணனை போலீசார் கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com