அமைதி பேரணி நடத்திய ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கைதுசெய்வதா? - அண்ணாமலை கண்டனம்

கைது செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
அமைதி பேரணி நடத்திய ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கைதுசெய்வதா? - அண்ணாமலை கண்டனம்
Published on

சென்னை,

பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

சென்னை போரூரில் அமைதி வழியில் பேரணி நடத்திய ஆர்எஸ்எஸ் அமைப்பினரை திமுக அரசின் காவல்துறை கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை செய்யும் குற்றவாளிகளும், முதியோர்களை கொலை செய்யும் கொலையாளிகளும் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருப்பதை கண்டுகொள்ளாத திமுக அரசு, தங்கள் அமைப்பின் 100வது ஆண்டு நிறைவை குறிக்கும் விதமாக அமைதி பேரணி சென்ற ஆர்எஸ்எஸ் அமைப்பினரை கைது செய்திருப்பது காழ்ப்புணர்ச்சியே அன்றி வேறென்ன?

இதுமட்டுமன்றி, கடந்த ஆண்டும் இதே போல ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு தடை விதிக்க எல்லா வழியிலும் முயற்சித்த திமுக அரசுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம், வருங்காலத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பேரணிக்கு அனுமதி மறுக்கக்கூடாது என்றும் உத்தரவிட்டது. அதையும் மீறி காவல்துறை கைது செய்திருப்பது நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் செயலாகவே உள்ளது.

இனியும் இதுபோன்ற, சிறுபிள்ளைத்தனமான அரசியல் விளையாட்டுகளை திமுக அரசும், காவல்துறையும் தவிர்க்க வேண்டும் என்றும், கைது செய்யப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பினரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com