தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

காவேரிப்பட்டணம் அருகே தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது
Published on

காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 32). தொழிலாளி. இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அங்காளம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்று விட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த 2 வாலிபர்கள் கார்த்திக்கின் மனைவியிடம் தகராறு செய்தனர். இதை தட்டி கேட்ட கார்த்திக்கை அந்த நபர்கள் தாக்கினர். இதுகுறித்து கார்த்திக் கொடுத்த புகாரின் பேரில் காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கார்த்திக்கை தாக்கியது கருக்கன்சாவடியை சேர்ந்த ஹரி (27), விஜய் (27) என தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com