தேனி அருகே ஆடு திருடர்கள் 2 பேர் கைது

தேனி அருகே ஆடு திருடர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தேனி அருகே ஆடு திருடர்கள் 2 பேர் கைது
Published on

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டி சஞ்சய் காந்தி தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 55). இவர் ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த 17-ந்தேதி முத்துவின் ஆட்டுக்கொட்டகையில் அடைத்து வைத்திருந்த ஆடுகளில் ஒரு ஆடு திருடு போனது. இதுகுறித்து அவர் பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அப்போது பூதிப்புரம் மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த மனோ ஆனந்த் (36), கார்த்திக் (32) ஆகிய 2 பேரும் சேர்ந்து ஆட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணையில் அவர்கள் 2 பேரும் மேலும் சில இடங்களிலும் ஆடுகள் திருடியது தெரியவந்தது. இதுதொடர்பாக 2 பேரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com