கைதான ஆயுதப்படை போலீஸ்காரர் பணியிடை நீக்கம்

கைதான ஆயுதப்படை போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கைதான ஆயுதப்படை போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
Published on

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே சிறுவாச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 30). இவர் பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் பிரபாகரனை நேற்று முன்தினம் சேலம் மாவட்டம், ஆத்தூர் அனைத்து மகளிர் போலீசார் அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையின் இடையே பிரபாகரன் தப்பி ஓடி விட்டார். பின்னர் அவரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் ஆயுதப்படை போலீஸ்காரர் பிரபாகரன் மீது துறை ரீதியான நடவடிக்கையாக, அவரை பணியிடை நீக்கம் செய்து பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவிட்டா.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com