கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: அண்ணாமலை

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பாக, தேர்வுகள் எழுதிய இளைஞர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
 கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்: அண்ணாமலை
Published on

சென்னை,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

கூட்டுறவுத் துறையில் மாநில மற்றும் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் சார்பாக, கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்ட தேர்வுகளின் இறுதி பட்டியல், 100 நாட்கள் கடந்தும் வெளியிடப்படாமல் இருப்பதால், கீழ்ப்பாக்கம் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அலுவலகம் முன்பாக, தேர்வுகள் எழுதிய இளைஞர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கூட்டுறவுத் துறையில், மாநில அளவிலான தேர்வில், 327 பணியிடங்களிலிருந்து 267 ஆக குறைத்து துரோகம் செய்ததோடு மட்டுமல்லாமல், மாவட்ட அளவிலான 2314 பணியிடங்களுக்காக, பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நம்பிக்கையோடு தேர்வெழுதிக் காத்துக் கொண்டிருக்கையில், அதைக் குறித்து எந்தக் கவலையுமின்றி அலட்சிய மனோபாவத்தில் இருக்கும் திமுக அரசுக்கு, வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று நடைபெறும் அமைதியான அறப்போராட்டம், வெறும் கோரிக்கை மட்டுமல்ல, பல குடும்பங்களின் நியாயத்திற்கான குரல். தகுதியான இளைஞர்களின் எதிர்காலத்தை தாமதப்படுத்தாமல், உடனடியாக இறுதி தேர்வு பட்டியலை வெளியிட வேண்டுமென்றும், கைது செய்யப்பட்ட தேர்வர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.என தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com