முதியவரை நிர்வாணமாக்கி ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டல் - 3 பேர் கைது

முதியவரை நிர்வாணமாக்கி ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய கணவன், மனைவி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

சென்னை கொடுங்கையூர் எருக்கஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (63 வயது). மரக்கடை உரிமையாளர். அதே பகுதியை சேர்ந்த பத்மா (47 வயது), எஸ்தர் நான்சி (30 வயது), அவரது கணவர் முன்னா கருப்புசாமி (33 வயது) ஆகிய 3 பேரும் கோவிந்தசாமியை புழல் பகுதிக்கு அழைத்து சென்று ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளனர்.

பின்னர் அவரை நிர்வாணமாக்கி ஆபாச வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் தர வேண்டும். இல்லாவிட்டால் அந்த வீடியோவை சமூகவலைதளங்களில் பரப்பி விடுவோம் என்று மிரட்டினர்.

பணத்தை எடுத்து வருவதாக கூறி அவர்களிடம் இருந்து தப்பிய கோவிந்தசாமி, கொடுங்கையூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்மா, எஸ்தர் நான்சி மற்றும் முன்னா கருப்புசாமி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com