நடந்து சென்றவரை கிண்டல் செய்தவருக்கு கத்திகுத்து

பல்லடம் அருகே தெருவில் சென்ற போது கிண்டல் செய்தவரை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடந்து சென்றவரை கிண்டல் செய்தவருக்கு கத்திகுத்து
Published on

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியை சேர்ந்த வேல்முருகன்(வயது40), பனியன் நிறுவனத்தில் வேலை செய்துவருகின்றார்.

சம்பவத்தன்று வேல்முருகன் அந்த பகுதி நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(42) என்பவர் அந்த வழியாக வந்தார். அப்போது வேல்முருகன் தன் நண்பர்களுடன் சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.

இதனை கவனித்த ராஜ்குமார் அவர்கள் தன்னை கிண்டல் செய்கிறார்கள் என நினைத்துக்கொண்டு அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

பின்னர் தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வேல்முருனை குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது தொடர்பாக வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜ்குமாரை கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com