13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

பாப்பிரெட்டிப்பட்டி அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
Published on

பாப்பிரெட்டிப்பட்டி

13 வயது சிறுமி கர்ப்பம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, கடந்த மார்ச் மாதம் 10-ந் தேதி, 13 வயது சிறுமி அவர்களது பெற்றோர் வீட்டில் இல்லாத போது தனியாக இருந்தார். அப்போது பாப்பிரெட்டிப்பட்டி அண்ணா நகரை சேர்ந்த பழனி என்பவரின் மகன் ஜெயக்குமார் (வயது 30), சிறுமியின் வீட்டுக்கு சென்று தண்ணீர் கேட்டு உள்ளார். அந்த சிறுமி தண்ணீர் கொடுத்துள்ளார்.

இதனிடையே வீட்டுக்குள் புகுந்து சிறுமியை அந்த வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பிறகு கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி மீண்டும் அந்த வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி பயந்து யாரிடமும் கூறவில்லை.

இந்த நிலையில் சிறுமிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், நேற்று அவரது தாயார் பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அந்த சிறுமி 3 மாத கர்ப்பிணியாக உள்ளார் என தெரிவித்தனர்.

கைது

இதையடுத்து இதற்கு காரணமான ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் அந்த சிறுமி புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ஜெயக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா வழக்குப்பதிவு செய்து விசாரித்தா.

பின்னர் ஜெயக்குமாரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com