பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம்; 2 பேர் போக்சோவில் கைது

ஊத்தங்கரையில் பள்ளி மாணவியை கட்டாய திருமணம் செய்த 2 பேரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம்; 2 பேர் போக்சோவில் கைது
Published on

ஊத்தங்கரை

ஊத்தங்கரை அடுத்த வெங்கடதாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பர்சித் (வயது 23). இவர் அதே பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி பழகியதோடு பாலியல் தொல்லை கொடுத்து கட்டாய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ஊத்தங்கரை போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் பர்சித், திருமணத்துக்கு உதவியதாக நண்பர் பேராம்பட்டு கிராமத்தை சேர்ந்த சிவா (28) ஆகிய 2 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் உடந்தையாக இருந்ததாக வெங்கடதாம்பட்டியை சேர்ந்த செந்தில் (55), சபரி (29), கார்த்திக் (23) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com