கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

செவிலியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்
மு.வீரபாண்டியன்
Published on: 

சென்னை,

கைது செய்யப்பட்டுள்ள செவிலியர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல். இது குறித்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சரியான அணுகுமுறையல்ல

சென்னையில் பணி நிரந்தரம் ,ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடுகின்ற செவிலியர்களை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ,அவர்களை தமிழ்நாடு அரசு கைது செய்திருப்பது சரியான அணுகுமுறையல்ல.

 கைது செய்யப்பட்டுள்ள அனைத்து செவிலியர் சங்க நிர்வாகிகளையும், செவிலியர்களையும்  தமிழ்நாடு அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும்.

கோரிக்கைகள்

செவிலியர் சங்க நிர்வாகிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென ,இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com