கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்கள் விடுவிப்பு

மே தின பூங்காவில் ஒன்று கூடிய தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டநிலையில் தற்போது விடுவிக்கப்பட்டனர்.
சென்னை,
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாட்களாக போராடி நள்ளிரவில் கைதான தூய்மைப் பணியாளர்கள், அடுத்தக்கட்ட நடவடிக்கைக் குறித்து ஆலோசிக்க இன்று சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் கூடியிருந்தனர். அப்போது அவர்களை கலைந்து போகுமாறு எச்சரித்த போலீசார் சில நிமிடங்களிலேயே குண்டுக்கட்டாக கைது செய்தனர்.
இந்நிலையில் மே தின பூங்காவில் ஒன்று கூடியதற்காக கைது செய்யப்பட்ட தூய்மைப்பணியாளர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக போராட்டக்குழுவினர் கைது செய்யப்பட்ட விதம் சம்பந்தமான வழக்கும், தனியார்மயத்தை எதிர்த்து போராட்டக்குழுவினர் தொடர்ந்த வழக்கும் சென்னை ஐகோர்ட்டில் விசாரணையில் இருந்துவரும்நிலையில், சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் தூய்மைப் பணியாளர்கள் கூடி ஆலோசனை நடத்த இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது.






