ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை கைது செய்வது.. கடைந்தெடுத்த பாசிசம் - உதயநிதி

போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்ப இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உதயநிதி தெரிவித்துள்ளார்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணை கைது செய்வது.. கடைந்தெடுத்த பாசிசம் - உதயநிதி
Published on: 

சென்னை,

தாராபுரம் நா.த.க. வேட்பாளர் கார்த்திகா கைதை வன்மையாக கண்டிப்பதாக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-

தாராபுரம் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சகோதரி கார்த்திகாவை இந்த Circus அரசாங்கம் கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தேர்தல் நேரத்தில் பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், அரசியல் பழிவாங்கலோடும் - த.வெ.க.வினரின் போதைப்பொருள் கடத்தல் செய்திகளை திசைத்திருப்பவும் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடைந்தெடுத்த பாசிசம்

அரசியலில் விமர்சனங்களும் - ஜனநாயக ரீதியான போராட்டங்களும் தவிர்க்க முடியாதவை. அதற்காக எதிர் வரிசையில் உள்ள ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை கைது செய்வது என்பது கடைந்தெடுத்த பாசிசம்.

இந்த ரீல்ஸ் முதல்-அமைச்சர், பா.ஜ.க-வின் Carbon Copy-ஆக செயல்படாமல், சகோதரி கார்த்திகாவை விடுவிக்கத் தேவையான நடவடிக்கையை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com