

சென்னை,
எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகத் தொடர்ச்சியாகப் போராடி வரும் தூய்மைப் பணியாளர்களைக் குண்டுக்கட்டாகக் கைது செய்யும் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் முற்றிலும் நியாயமானவை. அக்கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து அரசு தூய்மைப் பணியாளர்களுடன் முறையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.