கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
Published on

சென்னை,

சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் 21-ம் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிலையில் இன்று திறந்து வைத்தார்.

கிண்டி கிங் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரம் படுக்கை வசதிகளுடன் 4.89 ஏக்கரில் ரூ.240 கோடி மதிப்பில் இந்த பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 51,429 சதுர மீட்டர் பரப்பில் 6 தளங்களுடன் உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

இதயம், சிறுநீரகம், மூளை நரம்பியல், குடல்-இரைப்பை உள்ளிட்ட பிரிவுகளுக்கு அறுவை சிகிச்சை துறை அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை திறப்பு காரணமாக கிண்டி மற்றும் சைதாப்பேட்டை பகுதிகளில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com