கலைஞர் மகளிர் உரிமை திட்டம்; அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
கலைஞர் மகளிர் உரிமை திட்டம்; அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்
Published on

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர்-துறையூர் சாலையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக கூட்டரங்கில் மகளிர் உரிமை திட்ட தொடக்க விழா நடந்தது. விழாவில் அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு, திட்டத்தை தொடங்கி வைத்து, ஏ.டி.எம். அட்டைகளை தகுதியான 2 ஆயிரம் குடும்ப தலைவிகளுக்கு வழங்கினார். விழாவிற்கு மாவட்ட கலெக்டர் கற்பகம், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி, பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.விழா நடைபெற்ற அரங்கிற்கு அருகிலேயே இருந்த நடமாடும் ஏ.டி.எம். வாகனத்தில் குடும்ப தலைவிகள் பணம் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் சென்றனர். மாவட்டத்திற்கு முதற்கட்டமாக வங்கிகள் மூலம் 7 ஆயிரத்து 823 பேருக்கு ஏ.டி.எம். அட்டைகள் வரப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் இ-சேவை மையங்கள் மேல்முறையீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு விண்ணப்பங்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காண அனைத்து அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, வருவாய் கோட்டாட்சியர் நிறைமதி, தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலாளர் நீல்ராஜ், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி (ஆலத்தூர்), பிரபா செல்லப்பிள்ளை (வேப்பூர்), மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பாரத்குமார், மாவட்ட கவுன்சிலர் தழுதாழை பாஸ்கர் மற்றும் அனைத்து அரசுத்துறை முதல்நிலை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com