ஆருத்ரா தரிசன விழா: கடலூர் மாவட்டத்திற்கு 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை

சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் 6-ம் தேதி ஆருத்ரா விழா நடைபெற உள்ளது.
ஆருத்ரா தரிசன விழா: கடலூர் மாவட்டத்திற்கு 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை
Published on

கடலூர்,

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசன விழாவும். மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படுவது வழக்கம். ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும் ஆருத்ரா தரிசனமாகும்.

சேந்தனார் வீட்டுக்கு சிவன் பெருமான் களி உண்ண சென்ற தினம் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரம் ஆகும். அதனால் இந்த நாளையே ஆருத்ரா தரிசன விழாவாக கொண்டாடப்படுவதாக புராணங்களில் கூறப்படுகிறது.

இத்தகைய சிறப்புமிக்க ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த மாதம் 28-ஆம் தேதி கொடியேற்றுத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. இந்தனை தொடர்ந்து பஞ்சமுக மூர்த்திகள் வீதி உலா பல்வேறு வாகனங்களில் தினமும் நடைபெற்று வருகிறது. இதில் நாளை தேரோட்டம் நடைபெற உள்ளது.

இந்த தேரோட்டத்தை முன்னிட்டு பஞ்சமூர்த்திகள் தனி தனி தேர்களில் எழுந்தருளி அருள் புரிய உள்ளனர். இதை தொடர்ந்து நாளை மறுநாள் 6-ம் தேதி அன்று விழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் ஆருத்ரா தரிசனம் மதியம் 2 மணியளவில் நடைபெற உள்ளது. அப்பொழுது நடராஜர் சிவகாமி சுந்தரி நடனம் ஆடிய படியே பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிய உள்ளனர்.

இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு வரும் 6-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com