ஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை முடக்கிய போலீஸ்..!

ஆருத்ரா நிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே சுரேஷின் வங்கி கணக்கை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர்.
ஆருத்ரா மோசடி: நடிகர் ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்குகளை முடக்கிய போலீஸ்..!
Published on

சென்னை,

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்டு என்ற செயல்பட்டு வந்தது. முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வரை வட்டி எனக்கூறி சுமார் 1 லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து, ரூ.2,438 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான புகார்களின் அடிப்படையில் பொருளாதார குற்றத்தடுப்புப் பிரிவு, அந்த நிறுவனத்தின் இயக்குநர்கள் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், நடிகர், தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவரான ஆர்.கே.சுரேசுக்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. இந்த வழக்கில் வெளிநாடு தப்பிச் சென்ற நடிகர் ஆர்.கே.சுரேஷ் உட்பட 4 பேருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் ஆர்.கே. சுரேஷின் வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளனர். ஆருத்ரா மோசடி புகாரில் ஆர்.கே.சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதால் குற்றப்பிரிவு போலீசார் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com