சென்னைக்கு புதிய கலெக்டராக அருணா நியமனம்

சென்னைக்கு புதிய கலெக்டராக அருணா நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னைக்கு புதிய கலெக்டராக அருணா நியமனம்
Published on

இதுகுறித்து தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:-

சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்த ஜோதி, எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார். எழுதுபொருள் அச்சுத்துறை இயக்குனராக இருந்த அருணா, சென்னை மாவட்ட கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சத்தீஷ்கார் மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக 2019-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட லலித்தாதித்யா நீலம், அதே ஆண்டு தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பிருந்தாவை திருமணம் செய்வதை முன்னிட்டு, சத்தீஷ்கார் மாநிலத்தில் இருந்து தமிழகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.

தமிழகத்துக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து சேலம் ஸ்டார்ச் மற்றும் சாகோ (ஜவ்வரிசி) உற்பத்தியாளர்கள் சேவை தொழில் கூட்டுறவு சங்க (சாகோசெர்வ்) மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com