பா.ஜ.க.வில் இருந்து விலகிய அருணாச்சலம் - மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்

பா.ஜ.க.வில் இருந்து விலகிய அருணாச்சலம் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.
பா.ஜ.க.வில் இருந்து விலகிய அருணாச்சலம் - மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்
Published on

சென்னை,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த அருணாச்சலம், அக்கட்சியில் இருந்து விலகி மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தார். இந்நிலையில் மீண்டும் அவர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

"மக்கள் நீதி மய்யத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அருணாச்சலம், கமல்ஹாசனை நேரில் சந்தித்து, நமது கட்சியில் மீண்டும் இணைந்தார். அரசியலில் ஆழங்காற்பட்ட அனுபவம் மிக்க அருணாச்சலம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த நம்மவரால் தான் முடியும் என்பதை உணர்ந்து களப்பணியாற்றியவர்.

அவர் மீண்டும் நம்மோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யத்தினை பெருவெற்றியடையச் செய்யவேண்டுமெனும் உயரிய நோக்கத்துடன் உழைக்க வந்திருக்கும் அருணாச்சலம் உடன் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளும், அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைத்து நமது கட்சியின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உதவவேண்டும்."

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com