அறுபடை வீடு ஆன்மிகப் பயணம்: திருச்செந்தூரில் இன்று தொடங்குகிறது

ஆன்மிகப் பயணத்தின் மூன்றாம் கட்டம் திருச்செந்தூரில் இன்று தொடங்குகிறது.
அறுபடை வீடு ஆன்மிகப் பயணம்: திருச்செந்தூரில் இன்று தொடங்குகிறது
Published on

சென்னை,

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் கட்டணமில்லா அறுபடை வீடு ஆன்மிகப் பயணத்தின் மூன்றாம் கட்டப் பயணம் திருச்செந்தூர், முருகன் கோவிலில் இருந்து 7-ந்தேதி (இன்று) தொடங்க உள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 200 பேர் பயன்பெறுகிறார்கள். இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்கும் முதியோர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகளுடன் பயணவழிப் பைகள் வழங்கப்படுகின்றது.

மேலும், அவர்களுக்கு உதவியாக செயல் அலுவலர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் மருத்துவ குழுவினரும் உடன் செல்கின்றனர். இந்த மூன்றாம் கட்டப் பயணம் திருச்செந்தூரில் தொடங்கி திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை, சுவாமிமலை, திருத்தணி, பழனி ஆகிய படைவீடுகளுக்கு சென்று 10-ந்தேதியன்று நிறைவடைகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com