அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து


அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின் வாழ்த்து
x
தினத்தந்தி 16 Aug 2025 10:57 AM IST (Updated: 16 Aug 2025 11:21 AM IST)
t-max-icont-min-icon

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். தாங்கள் நல்ல உடல்நலத்தோடு நீண்டகாலம் மக்கள் சேவையாற்றி, வெற்றியைப் பெற வாழ்த்துகிறேன். பொதுமக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தைத் தங்கள் தலைமைத்துவம் மேலும் வலுப்படுத்தட்டும்".

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story