சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவு: டாக்டர் ராதாகிருஷ்ணன் மகன் அரவிந்த் வெற்றி

அரவிந்த் ராதாகிருஷ்ணன் கடந்த 2022-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் 361-வது இடத்தை பெற்று இருந்தார்.
சென்னை,
சிவில் சர்வீசஸ் பதவிக்கான நேர்முகத் தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் 1,009 பேர் வெற்றி பெற்று இருப்பதாக தேர்வை நடத்திய யு.பி.எஸ்.சி. அதற்கான பட்டியலுடன் வெளியிட்டு இருந்தது. அந்த பட்டியலில் மின்சார வாரியத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் மகன் டாக்டர் அரவிந்த் ராதாகிருஷ்ணன் 80-வது இடத்தில் இருக்கிறார்.
இதற்கு முன்பு அரவிந்த் ராதாகிருஷ்ணன் கடந்த 2022-ம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்றோருக்கான பட்டியலில் 361-வது இடத்தை பெற்றாலும், பணியில் சேரவில்லை. இதனைத் தொடர்ந்து 2024-ம் ஆண்டுக்கான இந்த தேர்வில் பங்கேற்று 1,009 பேர் பட்டியலில் 80-வது இடத்துக்கு வந்துள்ளார். தற்போது அரவிந்த், மருத்துவ பட்ட மேற்படிப்பில் (எம்.டி. ) இறுதியாண்டு தேர்வை எழுதி முடிக்க உள்ளார்.
Related Tags :
Next Story






