அரியர் மாணவர்கள் தேர்ச்சி: அரசின் முடிவே இறுதியானது - சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி

அரியர் மாணவர்கள் தேர்ச்சி வழங்கும் விவகாரத்தில், அரசின் முடிவே இறுதியானது என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
அரியர் மாணவர்கள் தேர்ச்சி: அரசின் முடிவே இறுதியானது - சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேட்டி
Published on

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக கவுரி சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவருக்கு பல்கலைக்கழக பணியாளர்கள் பாராட்டு விழா நடத்தினர். நிகழ்ச்சியின் முடிவில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் விவகாரத்தில் அரசின் முடிவே இறுதியானது. பல்கலைக்கழக மானியக்குழு உள்பட இதர அமைப்புகளிடம் இருந்து அரியர் தேர்வு தொடர்பாக எந்த அறிவிப்பும் பல்கலைக்கழகத்துக்கு வரவில்லை. செமஸ்டர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தி இருந்த அரியர் மாணவர்கள் அனைவருக்கும் அரசின் வழிகாட்டுதலின்படி தேர்ச்சி வழங்கப்படும்.

பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரி இறுதி செமஸ்டர் தேர்வு மாணவர்களுக்கு ஆன்லைனில் நடத்தப்படும். சென்னை பல்கலைக்கழக மாணவர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஓய்வுபெற்ற பேராசிரியர்களுக்கான பணப்பலன்கள் உள்ளிட்ட பல்கலைக்கழகத்தில் நிலவும் குறைகள் விரைவில் சரி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com