தமிழ்நாட்டை பொறுத்த வரை பாஜக எழுந்து நிற்க முடியாத கட்சியாகி விட்டது : விஜயதாரணி கடும் விமர்சனம்

எனது இந்த புதிய பயணம் வெற்றிகரமாக இருக்கும் என விஜயதாரணி தெரிவித்தார்.
விஜயதாரணி
Published on

சென்னை,

விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மூன்று முறை எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்றவர் விஜயதரணி. இவர் பதவிக்காலம் முடியும் முன்பே தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்தார். கடந்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. சார்பில் மீண்டும் விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்ட விஜயதாரணி தோல்வியை சந்தித்தார்.

விஜயதரணி த.வெ.க.வில் இணைந்தார்

தேர்தல் நேரத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என ஏற்கெனவே விஜயதரணி அதிருப்தியில் இருந்தாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பா.ஜ.க.வில் இருந்து விலகிய விஜயதாரணி இன்று சென்னை பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அமைச்சர் என்.ஆனந்த், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தார்.

இந்த நிலையில் அவர் தமிழக பாஜகவை கடுமையாக விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

ரோட்டில் நிற்கிறது

பா.ஜ.க வில் இருந்த சிறய கூட்டத்தையும் அண்ணாமலை தன்னுடன் சேர்த்துகொண்டார். அங்கே இப்போது நான்கு அல்லது ஐந்து தலைவர்கள் மட்டுமே இருக்கிறார்கள். இதனால் இனி அந்த வண்டி ஓடாது. ஸ்டார்ட் ஆகாத வாகனமாக ரோட்டில் நிற்கிறது.

எனது இந்த புதிய பயணம் வெற்றிகரமாக இருக்கும். ஒரு குடும்ப பிணைப்பாடு த.வெ.க.வில் இணைந்த விதம் நெகிழ வைத்தது. மனதளவில் புதிய உத்வேகமும். உற்சாகமும் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com