

சென்னை
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது:
"அ.தி.மு.கவைப் பொறுத்தவரை பிரதமர் மோடி எங்களின் நண்பர் மட்டுமே. மற்றபடி அவர் கட்சியின் கொள்கைகளில் தலையிடுவதில்லை. அ.தி.மு.கவுக்கு தந்தையும், தாயுமாக இருப்பவர்கள் எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் மட்டும்தான்.
பேரவையில் ஜெயலலிதா படத்திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடிக்கு நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. அ.தி.மு.க சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியதற்காக நடத்தவில்லை. இது ஏற்கனவே நாங்கள் முடிவெடுத்த ஒன்று"
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாகவே உள்ளது, அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்துக்கு துணை முதலமைச்சர் சரியான பதில் கூறிவிட்டார்.
எங்களை ஊழல் எனக் கூறும் நடிகர் கமல், திமுக தலைவர்களை சந்தித்தது ஏன்? இவ்வாறு அவர் கூறினார்.