

சென்னை,
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை தொடங்கியது. நாடு முழுவதும் 115 மாவட்டங்களில் 259- மையங்களில் ஒத்திகை நடைபெறுகிறது. தமிழகத்தில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி முதல் காலை 11 மணி வரை 2 மணி நேரம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது.
தமிழகத்தில் சென்னை, நீலகிரி, நெல்லை, கோவை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் நடைபெறுகிறது. சென்னையில் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சாந்தோம் மற்றும் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள், நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் அரசு மருத்துவமனைகள் மற்றும் நெல்லக்கோட்டை ஆரம்ப சுகாதார மையம், நெல்லை மாவட்டத்தில் நெல்லை அரசு மருத்துவமனை, சமாதானபுரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம், ரெட்டியார்பட்டி ஆரம்ப சுகாதார மையத்திலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.
அதேபோல் திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி அரசு மருத்துவமனை, நெமம் ஆரம்ப சுகாதார மையம், திருமழிசை ஆரம்ப சுகாதார மையம், கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் இ.எஸ்.ஐ மருத்துவமனை, பி.எஸ்.ஜி மருத்துவ அறிவியல் நிறுவனம், சூலூர் அரசு மருத்துவமனை, எஸ்.எல்.எம். ஹோம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம், பூலுவாப்பட்டி ஆரம்ப சுகாதார மையம் என 17 மையங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.