மதியம் 1 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி-54.17 % நாங்குநேரி-41.35% வாக்குப் பதிவு

மதியம் 1 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 54.17 %, நாங்குநேரி தொகுதியில் 41.35% வாக்குகள் பதிவாகி உள்ளன.
மதியம் 1 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி-54.17 % நாங்குநேரி-41.35% வாக்குப் பதிவு
Published on

சென்னை,

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிவரை நடைபெறுகிறது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

காலை 9 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 12.84 சதவீதம் வாக்குகளும், நாங்குநேரியில் 18.04 சதவீதம் வாக்குகளும் மற்றும் புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 9.66 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

புதுச்சேரியில் காலை முதல் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் வாக்கு சாவடிகளுக்கு மக்கள் குறைவாக வருகை தந்துள்ளனர். இதனை முன்னிட்டு காலை 9 மணிவரை மிக குறைவான அளவில் வாக்குகள் பதிவாகி உள்ளன.

விக்கிரவாண்டி தொகுதியில் காலை 11.00 மணி நிலவரப்படி 32.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாங்குநேரி தொகுதியில் காலை 11.00 மணி நிலவரப்படி 23.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

மதியம் 1 மணி நிலவரப்படி விக்கிரவாண்டி தொகுதியில் 54.17 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நாங்குநேரி தொகுதியில் 41.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் மதியம் 1 மணி நிலவரப்படி 42.71சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com