திருவாரூர் அஞ்சலகத்தில் விரைவுதபால், பார்சல் பிரிவு ஏற்படுத்த வேண்டும்

திருவாரூர் அஞ்சலகத்தில் விரைவுதபால், பார்சல் பிரிவு ஏற்படுத்த வேண்டும்
திருவாரூர் அஞ்சலகத்தில் விரைவுதபால், பார்சல் பிரிவு ஏற்படுத்த வேண்டும்
Published on

திருவாரூரில் தபால் துறையின் அகில இந்திய ஆர்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். ஊழியர் சங்க 34-வது கோட்ட அளவிலான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கோட்டப்பொறியாளர் வெங்கடசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில முன்னாள் அமைப்பு செயலாளர் தர்மதாஸ் தேசிய கொடியேற்றினார். சம்மேளன கொடியை மாநில செயலாளர் ரமேஷ் ஏற்றி வைத்தார். கூட்டத்தை முன்னாள் மாநிலத்தலைவர் கணேசன் தொடங்கி வைத்தார். இதில் நாகை மாலி எம்.எல்.ஏ., மாநில செயலாளர் பரந்தாமன், எழுத்தாளர் சுரேஷ் பிரதீப் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் திருச்சி கோட்டம், திருவாரூர் அஞ்சலகத்தில் விரைவு தபால், பார்சல் பிரிவு ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு ஏற்ப ஊழியர்களுக்கு மாதம் ரூ.12 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக கோட்ட துணைத்தலைவர் மனோஜ்குமார் வரவேற்றார். முடிவில் கிளைச்செயலாளர் சத்தியராஜ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com