தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

தமிழகத்தின் 34-வது மாவட்டமாக உதயமானது கள்ளக்குறிச்சி! விழுப்புரத்தை பிரித்து உருவாக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சியை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி.
தமிழகத்தின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி
Published on

சென்னை

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பிரித்து, புதிதாக தோற்றுவிக்கப்பட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை அருகே உள்ள சாமியா மடம் மைதானத்தில் நடைபெற்ற விழாவுக்கு தமிழக துணை முதல்வா ஓ.பன்னீசெல்வம் தலைமை தாங்கினார்.

தமிழக முதல்வா எடப்பாடி கே.பழனிசாமி கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தொடக்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

வருவாய், பேரிடா மேலாண்மைத்துறை அமைச்சா ஆா.பி.உதயகுமா, சட்டம்-கனிம வளத்துறை அமைச்சா சி.வி.சண்முகம், எம்எல்ஏக்கள் இரா.குமரகுரு, அ.பிரபு, எம்.சக்கரபாணி, ஆா.முத்தமிழ்செல்வன், வருவாய் நிவாக ஆணையா ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய், பேரிடா மேலாண்மைத் துறை செயலா அதுல்ய மிஸ்ரா, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா ஆ.அண்ணாதுரை ஆகியோ விழாவில் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com