போராட்டத்துக்கு பொதுமக்கள் தயாரானதால்கால்வாய் தூர்வாரும் பணி உடனடியாக தொடக்கம்

லத்தேரியில் பொதுமக்கள் போராட்டத்துக்கு தயாரானதையடுத்து கால்வாய் தூர்வாரப்பட்டது,
போராட்டத்துக்கு பொதுமக்கள் தயாரானதால்கால்வாய் தூர்வாரும் பணி உடனடியாக தொடக்கம்
Published on

கே.வி.குப்பம்

லத்தேரியில் பொதுமக்கள் போராட்டத்துக்கு தயாரானதையடுத்து கால்வாய் தூர்வாரப்பட்டது,

கே.வி.குப்பத்த அடுத்த லத்தேரி 6-வது வார்டில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரக்கோரி பல முறை பொதுமக்கள் முறையிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த பிரச்சினையில் ஊராட்சி அலுவலகத்தை ஊர் மக்கள் முற்றுகையிடப் போவதாக தகவல்கள் வெளிவந்தன. இதை அறிந்ததும் ஊராட்சி செயலாளர் விஸ்வநாதன் 6-வது வார்டுக்கு விரைந்து சென்று அப்பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கால்வாய் தூர்வார உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்படி செங்கற்கள், முரம்பு மண் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com