செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், இன்று உபரிநீர் திறப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், இன்று உபரிநீர் திறப்பு
Published on

சென்னை,

சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய செம்பரம்பாக்கம் ஏரி பரந்து விரிந்து 6,300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் மொத்தமாக 3,645 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு பெய்த கனமழை மற்றும் நீர்வரத்து காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டிய உள்ளது.

அந்த வகையில், செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு 24 அடியாக உள்ள நிலையில், நேற்று23. 36 அடியாக இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரியின் பாதுகாப்பு அளவான 23 அடியை தாண்டியதால் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்படும் என ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் படி, இன்று ஏரி முழு கொள்ளளவை எட்டியதால், செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று மதியம் 12 மணிக்கு 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்து உள்ளார். 

X

Daily Thanthi
www.dailythanthi.com