வரத்து அதிகரித்ததால் ஈரோட்டில் காய்கறி விலை குறைந்தது

ஈரோடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது.
வரத்து அதிகரித்ததால் ஈரோட்டில் காய்கறி விலை குறைந்தது
Published on

ஈரோடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்ததால் விலை குறைந்தது.

விலை குறைவு

ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டுக்கு சத்தியமங்கலம், அந்தியூர், தாளவாடி, ஊட்டி, ஓசூர், கிருஷ்ணகிரி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், தாராபுரம், கர்நாடக மாநிலம் பெங்களூரு, ஆந்திர மாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு விளைச்சல் குறைந்ததால் காய்கறி வரத்து குறைந்தது. இதனால் காய்கறி விலை கிடுகிடுவென உயர்ந்தது. இந்தநிலையில் கடந்த 2 வாரங்களாக ஈரோடு மார்க்கெட்டுக்கு காய்கறி வரத்து அதிகரித்தது. இதனால் விலையும் குறைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்தனர்.

தக்காளி

ஈரோடு மார்க்கெட்டுக்கு நேற்று 150 டன் காய்கறி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. ஒரு கிலோ தக்காளி ரூ.55-க்கும், சின்ன வெங்காயம் ரூ.40 முதல் ரூ.50 வரையும் விற்பனையானது.

ஈரோடு மார்க்கெட்டில் நேற்று விற்பனையான காய்கறி விலை விவரம் கிலோவில் வருமாறு:-

கத்தரிக்காய் - ரூ.40, வெண்டைக்காய் - ரூ.25, முள்ளங்கி - ரூ.40, பாகற்காய் - ரூ.45, பீர்க்கன்காய் - ரூ.45, புடலங்காய் - ரூ.30, முருங்கை காய் - ரூ.40, கருப்பு அவரை - ரூ.80, பட்ட அவரை - ரூ.50, கேரட் - ரூ.60, பீட்ரூட் - ரூ.60, முட்டைகோஸ் - ரூ.25, பீன்ஸ் - ரூ.65, உருளை கிழங்கு - ரூ.35, பெரிய வெங்காயம் - ரூ.40, பச்சை மிளகாய் - ரூ.80, குடைமிளகாய் - ரூ.80, இஞ்சி - ரூ.100 முதல் ரூ.200 வரை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com