

சென்னை,
தமிழக அரசின் இணை செயலாளராக இருந்த ஆஷிஷ்குமார், மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார். இதுதொடர்பாக தமிழக கவர்னர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் சமூக நலத்துறை மற்றும் சத்துணவுத்துறை இணை செயலாளராகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனராகவும் இருந்த ஆஷிஷ்குமார், மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
அதன்படி இணைமந்திரி அலுவலக (வடகிழக்கு பிராந்திய மேம்பாடு) சிறப்பு அதிகாரியாகவும், பிரதமர் அலுவலக (பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி) சிறப்பு அதிகாரியாகவும் பதவி வகிப்பார்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.