ஆசிய வலுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம்! பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்பயிற்சிக்கழக வீரர்கள் சாதனை

பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்பயிற்சிக்கழக வீரர்கள் ஆசிய வலுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்தனர்.
ஆசிய வலுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம்! பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்பயிற்சிக்கழக வீரர்கள் சாதனை
Published on

சேரன்மாதேவி,

துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் ஆசிய அளவிலான வலுதூக்கும் போட்டி கடந்த 24 ந்தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த போட்டி 30 ந்தேதி வரை நடைபெறுகிறது.

இதில் இந்திய அணியின் சார்பாக சேரன்மாதேவி பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சி கழகத்தில் பயிற்சி பெற்றுவரும் மாணவர் ராகுல் ரோஹித் கலந்து கொண்டார்.

மாணவன் ராகுல் ரோஹித் பாளையங்கோட்டை ரோஸ் மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் சப் ஜூனியர் 59 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

அதே உடற்பயிற்சி கழகத்தில் பயிற்சி பெற்று வரும் பாளையங்கோட்டை ராஜாக்குடியிருப்பை சேர்ந்த ராகுல், ஜூனியர் 120 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார்.

இதேபோல், நெல்லை டவுன் அட்லஸ் உடற்பயிற்சி கழகத்தில் பயிற்சி பெற்றுவரும் ஷேக் முகமது அலி, ஜூனியர் 66 கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், திருநெல்வேலி வனத்துறை ஊழியர் உலகநாதன், சீனியர் 93 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்கள்.

ஆசிய போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களை தமிழ்நாடு வலுதூக்கும் சங்கத்தின் செயல் செயலாளர் நாகராஜன், பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நவீன உடற்பயிற்சி கழகத்தின் தலைவர் சிவராமலிங்கம் ரவி, செயலாளர் தளவாய் மூர்த்தி ஆகியோர் வாழ்த்தினார்கள்.

மேலும், திருநெல்வேலி மாவட்ட வலுதூக்கும் சங்கத்தின் தலைவர் துரை, செயலாளர் உதயகுமார், செயல் தலைவர் சண்முகசுந்தரம், துணைத்தலைவர்கள் சரவணகுமார், செல்வகுமார், கல்லத்தியான், துணை செயலாளர்கள் இசக்கிமுத்து, வினோத் ஆகியோர் வாழ்த்தினார்கள்.

ரோஸ் மேரி மெட்ரிகுலேஷன் பள்ளியின் தாளாளர் வெரோனிகா, பள்ளியின் தலைமை ஆசிரியை ஸ்வீட்டி ராஜ், பள்ளி ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கர், பள்ளி சட்ட ஆலோசகர் சுப்பையா, ஆசிரியர்கள் மந்திரிகுமார், ராஜேஷ் ஆகியோரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com