ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து


ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு டிடிவி தினகரன் வாழ்த்து
x

தமிழக வீரர்களின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

தென்கொரியாவில் நடைபெற்று வரும் 26வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கும் பிரவின் சித்ரவேல் அவர்களுக்கும், 20 கிலோ மீட்டர் நடையோட்டம் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கும் செர்வின் சபாஸ்டியன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகளவில் நடைபெறும் தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை தேடித் தந்திருக்கும் தமிழக வீரர்களின் வெற்றிப் பயணம் மென்மேலும் தொடர மீண்டும் ஒருமுறை வாழ்த்தி மகிழ்கிறேன்.என தெரிவித்துள்ளார் .

1 More update

Next Story