சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இலவச உதவி மையத்தை அணுகலாம்

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இலவச உதவி மையத்தை அணுகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் இலவச உதவி மையத்தை அணுகலாம்
Published on

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக பெரம்பலூர் மாவட்டத்தில் வசிக்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியால் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் முன்னதாகவே தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பெரம்பலூர் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் இலவச உதவி மையம் ஒன்றை தொடங்கி வைத்துள்ளார். விண்ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கு விண்ணப்பிப்பதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் உள்ள இலவச உதவி மையத்திற்கு நேரில் சென்றோ அல்லது 9840693775 என்ற செல்போன் எண்ணின் மூலமாக மையத்தை தொடர்பு கொள்ளலாம், என்று போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com