உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

உளவுத்துறை ஐஜியாக இருந்த அவினாஷ்குமார் மாற்றப்பட்டுள்ளார்.
உளவுத்துறை ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம்: தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

வடக்கு மண்டல ஐஜியாக உள்ள அஸ்ரா கர்க், உளவுத்துறை ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐஜியாக தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டு இருந்த அவினாஷ்குமார் மாற்றப்பட்டு புதிய ஐஜியாக அஸ்ரா கர்க் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

2004 ஆம் ஆண்டு ஐபிஎஸ் கேடரை சேர்ந்த அஸ்ரா கர்க், நேர்மையான அதிகாரி என்ற பெயரை பெற்றவர். கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் முன்பாக, தமிழக அரசு அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவராக அஸ்ரா கர்க்கே நியமனம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com