பத்திரிகையாளர்களுக்கு அசாம் போலீஸ் சம்மன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

பத்திரிகையாளர்களுக்கு அசாம் போலீஸ் சம்மன் அனுப்பியதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர்களுக்கு அசாம் போலீஸ் சம்மன்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
Published on

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தனியார் ஆங்கில பத்திரிகையில் பணியாற்றும் பத்திரிகையாளர்கள் கரண் தாப்பர், சித்தார்த் ஆகியோருக்கு சம்மன் அனுப்பிய அசாம் காவல்துறையின் நடவடிக்கையை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு இருவர் மீது நடவடிக்கை எடுக்க சுப்ரீம் கோர்ட்டு தடை விதித்த சில நாட்களில் சம்மன் அனுப்பியுள்ளனர். எப்.ஐ.ஆர். நகல் எதுவும் இல்லாமல் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் இருவரும் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது. பத்திரிகை சுதந்திரத்தை முடக்க தேசத்துரோக சட்டம் பயன்படுத்தப்படுகிறது. கேள்விகள் கேட்பது தேசத்துரோகமாகக் கருதப்பட்டால் ஒரு ஜனநாயகம் நிலைத்திருக்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com