தம்பதி மீது தாக்குதல்

தம்பதியை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தம்பதி மீது தாக்குதல்
Published on

மானூர்:

மானூர் அருகே உள்ள தெற்கு செழியநல்லூரை சேர்ந்தவர் ராமசாமி (வயது 70), காவலாளி. இவரது வீட்டு கழிவு நீர் செல்லும் ஓடையை பக்கத்து வீட்டைச் சேர்ந்த காளிராஜ் (47) என்பவர் மண்ணால் அடைத்து இருந்தார். இதனால் அப்பகுதியில் கழிவுநீர் தேங்கி நின்றது. இதையறிந்த ராமசாமியின் மனைவி ராதா (67) மண்வெட்டியால் கழிவுநீர் அடைப்பை சரிசெய்தார். இதை பார்த்த காளிராஜ், ராதாவிடம் வாக்குவாதம் செய்து தாக்கினார். இதை தட்டிக்கேட்ட ராமசாமியையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த 2 பேரும் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com