சென்னை மெரினாவில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: குதிரை ஓட்டி கைது

குதிரையில் ஏறிய சிறுமியிடம், குதிரை ஓட்டி நித்திஷ் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.
சென்னை மெரினாவில் சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்: குதிரை ஓட்டி கைது
Published on

சென்னை,

சென்னை மெரினா கடற்கரையில் குதிரை சவாரி பிரபலம். சவாரி தொழிலில் 20 குதிரைகள் இருக்கின்றன. பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரும் இடம் என்பதால் குதிரை சவாரி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

குதிரை சவாரிக்கு மெரினா கடற்கரையில் சிறியவர்களுக்கு 100 ரூபாயும், பெரியவர்களுக்கு 200 ரூபாயும் குதிரை சவாரிக்கு வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், ஆவடியை சேர்ந்த ஒரு குடும்பம் ஒன்று மெரினாவை சுற்றிப்பார்க்க வந்துள்ளனர். அப்போது 6 வயது சிறுமி குதிரை சவாரி செய்ய வேண்டும் என்று ஆசை ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு குதிரை ஓட்டிகொண்டிருந்த நிதிஷ் (வயது 18) என்பவர் வந்துள்ளார். குதிரை மீது சிறுமி சவாரி செய்துள்ளார்.

அப்போது தம்மிடம் நித்திஷ் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக சிறுமி பெற்றோரிடம் கூறினார். இதனையடுத்து ஐஸ் ஹவுஸ் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நித்திஷை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com