இளம்பெண் மீது தாக்குதல்

முன்விரோதத்தில் இளம்பெண்ணை தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இளம்பெண் மீது தாக்குதல்
Published on

நிலக்கோட்டை அருகே உள்ள முத்துலிங்கபுரத்தை சேர்ந்தவர் விக்னேஷ் குமார். அவருடைய மனைவி மனோரதி (வயது 26). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் முன்விரோதம் இருந்தது. இந்தநிலையில் சம்பவத்தன்று அங்குள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்த மனோரதியை கார்த்திக், அவரது உறவினர்கள் அரவிந்தன், கரந்தமலை, அனிதா ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் மனோரதி புகார் செய்தார். அதன்பேரில் 4 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com