வாலிபர் மீது தாக்குதல்

மானூர் அருகே வாலிபர் தாக்கப்பட்டார்.
வாலிபர் மீது தாக்குதல்
Published on

மானூர்:

மானூர் அருகே கீழ பிள்ளையார்குளத்தைச் சேர்ந்தவர் முருகன் மகன் ஆனந்தராஜ் (வயது 21). இவர் கங்கைகொண்டான் சிப்காட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் அங்குள்ள தனுஷ்கோடி நகர் பகுதியில் நின்றபோது, சிலர் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அந்த நபர்களின் பெற்றோரிடம் ஆனந்தராஜூம், அவருடைய அண்ணன் முத்துசாமியும முறையிட்டனர். அப்போது அங்கு வந்த சிலர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து ஆனந்தராஜ் மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com